Saturday, November 13, 2010

கருப்பு மஞ்சள் சிவப்பு -குறும் படம் விமர்சனம்

கருப்பு..... மஞ்சள்..... சிவப்பு...

பத்து நிமிடங்களில் பக்கா திரில்லர்.....

நான் முதலில் நல்ல நகைச்சுவை படம் பாக்கலாம் என்று தான் தேடினேன். நமக்கு பொழுது போகணும் அது எப்படி இருந்த என்ன... பதினோரு நிமிடங்கள் பதைபதைப்பு உண்டு பண்ணி பதினோரு மணி நேரம் நினைவில் வாழ்ந்த குறும்படம் ...

முத்தான முன்று நடிகர்கள் .... பேர் தெரியவில்லை ஆனால் வாழ்ந்து இருகிறார்கள்... மொட்டை அடித்து கொண்டு வரும் நடிகர் கதையின் ஹீரோவாக வருகிறார் ... முகத்தில் சாயம் பூசிக்கொண்டு வரும் போதும் , நண்பன் இறந்த பொது கண்களில் தெரியும் மரண பயத்தோடு வரும் ஒரு துளி கண்ணீரோடு கலக்கி இருக்கிறார்.... ஹீரோவாக உருவாக படுத்த பட்டவர் தேவைக்கு நடித்து இருக்கிறார்... மண்டை வெடிக்கும் காட்சியில் தூக்கி வாரி போட்டது....

இசை சூப்பர்அப்பு...... கதையோட நாயகன் இசை தான்..... பின்னி இருக்காரு ....

இயக்கம் : லோகு

தல இந்த மாதிரி கதைய நிறைய இங்கிலீஷ் படத்துல பாத்துருக்கேன்..

எனக்கு மறதி அதிகம்.....( மறதி ஒரு தேசிய வியாதி)....

இருந்தாலும் நிறைய தமிழ் படம் த்ரில்லர்நு பேருல உயிர வாங்குவானுங்க

(எல்லா பேய் படமும் தான்) நி கலக்கிட தல....

ஒளிப்பதிவு ; பாபு குமார்

இன்னொரு கதாநாயகன் தல.......

பாக்க வேண்டிய குறும் படம்.......

மதிப்பெண் ; 65/100


No comments: