Friday, November 12, 2010

உடலினை உறுதி செய் - 1


எப்படி வலை பதிவை உபயோக படுத்துவது என்பதை சிறிதளவு அறிவதர்கே எனக்கு ஒரு வருடங்கள் ஆகிவிட்டது .. சரியாக சொல்ல வேண்டுமானால் இது என்னுடைய கன்னி படைப்பு... ( ஏம்பா.... கை தடுங்க பா... )

உடலினை உறுதி செய் ....
உடற் பயிற்சியின் மகிமை பற்றி யார் யாரோ என்ன என்னமோ சொல்லிருகாங்க... மனிதன் குரங்காய் இருக்கும் போதே உடற் பயிற்சி ஆரம்பிச்சு..... மனிதன் வாழ்க்கை போராட்டத்திற்காக ஓட ஆரம்பித்த போதே அவன் தேக பயிற்சியின் மகிமையை அறிய ஆரம்பித்து விட்டான்.


ஹரப்ப, மொகஞ்சதாரோ அகழ்வராட்ச்சியின் போது கிடைத்த மிக உன்னதமான பொருள் மக்கள் உடற் பயிற்சியின் மகிமையை அறிந்திருந்தனர் ...
5000 வருடத்திற்கு முன்னால் இருந்தே உடல் பயிற்சியின் அவசியம் குறித்து பல முன்னுரைகள் வைக்க பட்டு உள்ளன .
உடற் பயிற்சி என்பது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி..... ஆனால் இப்பொது .....

உலகின் முன்றாவது நோய் உடல் பருமன் ...
இந்தியாவில் நான்காவது நோய் பருமன் ...
முதல் முன்று இடங்கள் முறையே ;
1. இதய சம்பந்தமானவை
2. நீரிழிவு
3. இரத்த கொதிப்பு
4. உடல் பருமன்
இதில் கவனிக்கவேண்டியது ... மற்ற நோய்களுக்கும் உடல் பருமன் தான் காரணம்
உலகின் 25.4% இறப்புக்கு இதய நோய் தான் காரணம் . இந்தியாவில் நூறில் எட்டு பேருக்கு இதய நோய் உள்ளது .
நீரிழிவு நோய் உலகின் 17 கோடி பேருக்கு உள்ளது.
இந்தியாவில் நூறில் 9 பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது .
இன்னொரு பதிப்பில் நீரிழிவு இதை பற்றி விரிவாக பேசலாம் .

நேத்து ஒரு நண்பர் என்னிடம் உடல் பருமன் பற்றி பேசி கொண்டு இருந்தார்.
அவரின் உடல் அறிக்கை இதோ :
எடை : 94
உயரம் : 179 cm
சரிவிகித உடல் அளவு (body mass index) : 29.3
சரியான அளவு - 21-24.4
அவருடைய எண்ணங்கள் எல்லாம் உணவில் தான் இருந்தது .
“சார் , ஒரு ரூமுக்குள்ள போகணும் சார் போய்டு வெளிய வந்தா ஒல்லியா ஆயிடனும் சார் “
உடம்பை வளர்ப்பதற்கு எவ்வளவு நாட்கள் ஆனது ஆனால் குறைக்க மட்டும் வெகு விரைவில் நடக்க வேண்டும் . இன்னக்கி பசங்களோட நிலைமை ரொம்ப மோசம் சார் . ஒருதன் கூட உடல் நலமிக்கவரக தெரியவில்லை .
பிச்சா , பர்கர், விரைவு உணவு என எல்லாம் கொடுமை ....
என்னுடைய வலை பதிவுக்கு இந்த பதிவு முன்னுரை தான் இன்னும் நிறைய சொல்ல இருக்கிறேன் . விரிவாக அடுத்த பதிவில் பாக்கலாம் .
அடுத்து வர இருக்கும் பதிவுகள் ;
உடல் நலம்
உடற் பயிற்சி வகைகள்
நீரிழிவு
இதய நோய்
உணவு கட்டுப்பாடு

No comments: