Wednesday, July 31, 2013

சர்க்கரை நோய் மற்றும் அதன் விளைவுகளை தடுத்தல்!

சர்க்கரை நோய் மற்றும் அதன் விளைவுகளை தடுத்தல்!

நீரிழிவு நோய் என்பது இலத்தீனில் 'இனிப்பு சிறுநீர்' என்று பொருள். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நீரிழிவு நோய் , இரத்த சர்க்கரை உயர்வதால் வருகின்றது என்று எளிதாக நினைத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் நீரிழிவு நோய் 'உயர் இரத்த சர்க்கரையையும்  தாண்டி இதயம், சிறுநீரகங்கள், நரம்புகள், கண்கள், கொழுப்பின் அளவு மற்றும் மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. உண்மையில் மருத்துவ நிபுணர்கள் நிரிழிவை பல உறுப்புகளின் நோயாக கருதுகின்றனர். நீரிழிவு நோய் மாரடைப்பு,சிறுநீரக கோளாறு மற்றும் கண்கள் பாதிப்பிற்கு 5 சதவிகிதம் காரணமாக இருக்கிறது. நீரிழிவின் தன்மையும் அதன் சிக்கல்களும் மேலே குறிப்பிட்டுள்ள ஆபத்தான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மிகப்பெரிய முக்கியத்துவம் பெறுகிறது.
துரதிருஷ்டவசமாக, நீரிழிவு நோய் மட்டும் தனியாக இருப்பதில்லை. இது நம் உடலில் பிற தேவையற்ற விருந்தினர்களையும் சேர்த்து கொண்டு இருக்கிறது, அதில் உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு முதலியவைகள் மிக முக்கியமானவர்கள். நீரிழிவு  பல உறுப்புகளை சேதப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது, அதன் துணைவர்களும் கூட. எனவே, தற்போது மருத்துவ நிபுணர்கள் இரத்த சர்க்கரை மட்டுமின்றி இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பை கட்டுப்படுத்துவதில் சம கவனத்தை செலுத்துகின்றனர். இதில் தனிப்பட்ட கூறுகள் புறக்கணிக்கப்படும் போது, அது இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை துரிதப்படுத்துகிறது, அது இறுதியில் மாரடைப்பு மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்துகிறது.எனவே நோய்கள் வரும் முன் தடுப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறந்த பரிசோதனைகள் மூலம் ஆரம்ப கட்டத்தில் நோய்கள் அறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இன்று, நீரிழிவு நோயை குணப்படுத்த முடியாது, ஆனால் அதற்கு சிகிச்சை உள்ளது. நீரிழிவு வாழ்நாள் முழுவதும் இருக்ககூடிய நோய் அதனால் அதை கட்டுபடுத்துவது மிகவும் அவசியம். மிகவும் உயர் இரத்த சர்க்கரை அளவு, திசுக்களில் நீண்ட கால சேதத்தை விளைவிக்கும், அது இதய, சிறுநீரக, நரம்பு, மற்றும் கண்கள் போன்ற பல்வேறு உறுப்புகளின் சேதத்திற்கு வழிவகுக்கும். நீரிழிவின் விளைவுகளால், நீரிழிவு நோய் உள்ளவரின் வாழ்கைத்தரம் பாதிப்பது மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினரையும் பாதிக்கும். இந்த விளைவுகள் முன்னேறிய நிலையில், சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டுவர இயலாது , அதனால் பயனுள்ள சிகிச்சை அளிக்க கடினமாக இருக்கும். மேலும் அதற்கு மிகவும் பணவிரயம் ஆகலாம்.
முன்நீரிழிவு என்பது  இரத்த சர்க்கரை அளவு சரியான அளவை விட அதிகமாக உள்ளது என்று அர்த்தம், ஆனால் நீரிழிவு நோயாக வரையறுக்க கூடிய அளவில் இல்லை என்று பொருள். 15% முதல் 30% முன்நீரிழிவு வகை, 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான ஆண்டுகளில் இரண்டாம் நீரிழிவு ஆக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் முன்நீரிழிவு  வகையில் இருந்தால், நீரிழிவின் நீண்ட கால விளைவுகளான இதயம் மற்றும் இரத்த நாளங்கள் சேதமடைய தொடங்கி விட்டது.
ஒரு நற்செய்தி என்னவெனில் முன்நீரிழிவு உங்கள் உடல்தரத்தை மேம்படுத்த வாய்ப்பு தருகிறது ஏனெனில் முன்நீரிழிவு நீர்ழிவாக மாறாமலும் இருக்கலாம். வாழ்க்கைமுறை மாற்றம், அதாவது ஆரோக்கியமான உணவு பழக்கமுறை , உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான எடை மூலமும் சரியான மருத்துவ ஆலோசனை மூலமும் உங்களின் இரத்தசர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். உங்கள் இரத்தசர்க்கரை,  இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவுகளை சரியான இடைவெளியில் பரிசோதிப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் , நமக்கு நீரிழிவு மற்றும் அதன் சிக்கல்கள் கண்டறிதல், சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்கு மிகவும் உதவுகிறது.இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களால் தகுந்த சிகிச்சையை சரியான நேரத்தில் அளிக்க முடியும் . நோயாளிகள் வாழ்க்கைமுறை மாற்றங்கள்,  தகுந்த சிகிச்சை மற்றும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் கொண்டு தனது பிரச்சனையை புரிந்து, நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.



No comments: